spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

1 கோடி ரூபாய் மோசடி ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக – பெண் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

 1 கோடி ரூபாய் மோசடி ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக - பெண் கைது.தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எனக்கூறி ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண் கைது. குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுந்தர் விக்னேஷ் என்பவரின் சகோதரி திவ்யா தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இவரது பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்த சிறுவனின் தாயாரான தேனி பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கனகதுர்கா (30) என்ற பெண் தனது மகனின் படிப்பு சம்பந்தமாக பேசியதில் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநராக மதுரையில் பணிபுரிந்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்கா, அரசுத் துறை உயரதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தனக்கு நன்கு தெரியும் எனக் கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்தால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கனகதுர்கா தெரிவித்துள்ளார்.

அதனை உண்மை என நம்பிய திவ்யா, தனக்கு ஆசிரியர் பணியும் சகோதரர் விக்னேஷ் சுந்தருக்கு பள்ளிக் கல்வித் துறையில் கணினி ஆபரேட்டர் மற்றும் அவரது நண்பர் இஜாஜ் அகமது ஆகியோர்களது வேலைக்காக ரொக்கமாகவும், வங்கிக் கணக்கு மூலமாக 18 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கனகதுர்கா, திவ்யாவின் பெயரில் ஆசிரியர் பணிக்கான பணியாணை ஒன்றை பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டதாக கூறி கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது பள்ளிக்கு செல்ல வேண்டும் எனவும், சில நாட்களுக்குப் பின்னர் வேலைக்கு போகலாம் எனக் கூறியுள்ளார். அதன்படி சில நாட்களுக்கு பின்னர் ஆசிரியர் வேலைக்குச் செல்ல திவ்யா தயாரான போது, கனகதுர்கா வழங்கிய பணியாணை போலியானது எனத் தெரியவந்தது.

சங்கராபுரம் அருகே மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, தனது சகோதரர் சுந்தர் விக்னேஷ் மூலமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கனகதுர்கா பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநராக பணிபுரிபவர் இல்லை எனத் தெரியவந்தது.

மேலும் பெரியகுளம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒச்சு என்ற சூர்யா, கம்பம் சரண்யா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, திவ்யாவை போல் தேனி மாவட்டத்தில் உள்ள 18 நபர்களிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கனகதுர்கா மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கனகதுர்கா, ஒச்சு என்ற சூர்யா மற்றும் சரண்யா ஆகிய 3 பேர் மீது கடந்த மார்ச் 30 ஆம் தேதியன்று வழக்குப்பதிந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முதல்கட்டமாக ஒச்சு என்ற சூர்யாவை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று கனகதுர்காவை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Video thumbnail
77வது குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
01:11
Video thumbnail
சென்னை குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் பாடலுக்கு மாணவிகள் நடனம்
02:03
Video thumbnail
சாதனைகள், வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:04
Video thumbnail
77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
01:28
Video thumbnail
நாங்கள் தான் மீண்டும் வருவோம்.. - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
01:15
Video thumbnail
2021 தேர்தலில் தோற்ற அதே அதிமுக , பா.ஜ.க. கூட்டணி தான் இப்போதும் உருவாகி உள்ளது.. - திருமாவளவன்
02:06
Video thumbnail
எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த டிடிவி தினகரன்.. TTV Dhinakaran | Edappadi Palaniswami
01:46
Video thumbnail
திமுக அரசு என்றாலே ஊழல் அரசு, கொடுங்கோல் ஆட்சி, பூஜ்ஜியம் ஆட்சி - அன்புமணி
01:52
Video thumbnail
திமுகவுக்கு இது இறுதித் தேர்தல் - மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
02:20
Video thumbnail
எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த டிடிவி தினகரன் | Edappadi Palaniswami | TTV Dhinakaran |EPS
07:59
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img