கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 72 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கையினால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் இல்லாத சூழல் இருந்து வருகிறது.
தற்போது சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமம் குன்னுமேட்டு பகுதியை சேர்ந்த சாராயவியாபரி ராஜேந்திரன் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய ரவுடி தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு.
இதனை அடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அதிரடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மணியாற்று பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், கேஸ் சிலிண்டர் அடுப்பை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவரிடமிருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கேஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே அந்த கிராமத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.