தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் நடிகர் தனுஷ் குபேரா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில் தொடர்ந்து பல படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் தனுஷின் 52 ஆவது படமான இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதற்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதைக் கடந்து தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?
00:50
Video thumbnail
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிச்சாமி
00:56
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார்
00:58
Video thumbnail
அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்
00:32
Video thumbnail
நாடாளுமன்றத்திற்கு GoodBye சொல்லிட்டு வந்துட்டேன்
00:49
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது
00:32
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது | மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
05:16
Video thumbnail
சின்னத்திரை நடிகை ஆவடி காவல் ஆணையரிடம் புகார்.. பெரும் பரபரப்பு | Serial Actress | Avadi | Police
08:27
Video thumbnail
முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு?
01:08
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார் | கலக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி
11:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img