spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘கூலி’ படப்பிடிப்பில் எப்போது இணைவார்? வீடு திரும்பிய ரஜினி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 ‘கூலி’ படப்பிடிப்பில் எப்போது இணைவார்? வீடு திரும்பிய ரஜினி.ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திலும் நடித்து வந்தார் ரஜினி.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடிகர் ரஜினி திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து ரஜினிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த வீக்கம் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி நேற்று (அக்டோபர் 3) இரவு 11 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அடுத்ததாக மருத்துவர்களின் பரிந்துரையின்படி நடிகர் ரஜினி சில வாரங்கள் ஓய்வெடுக்க இருக்கிறார்.

அதன் பின்னரே கூலி படப்பிடிப்பில் இணைவார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களின் போர்ஷன்களை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளின் தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img