‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்…. யார் தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்…. யார் தெரியுமா?குட் பேட் அக்லி படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அஜித்தின் 63வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஐதராபாத் பகுதியில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் மெயின் வில்லனாக பிரசன்னாவும் நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் அர்ஜுன் தாஸ், சுனில், பிரபு போன்றோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இவர் வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணைவார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

இருப்பினும் விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் யோகி பாபு ஏற்கனவே அஜித்துடன் இணைந்து வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம்
01:06
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம் | எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில்
11:55
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும்
01:01
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும் | திமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிடுகிறார்கள் | DMK
04:57
Video thumbnail
பாஜக அதிமுக கூட்டணிக்கும், தவெகவிற்கும் தான் கடுமையான போட்டி
01:09
Video thumbnail
"வாங்க கற்றுக் கொள்வோம்" | தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு | லோகநாதன் பேட்டி
04:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img