spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மகாராஜா பட இயக்குனருக்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மகாராஜா பட இயக்குனருக்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு!கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தினை குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமான நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அஜனீஸ் லோக்நாத் இதற்கு இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஹீரோவை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருந்தார் நித்திலன். எனவே திரை பிரபலங்கள் பலரும் மகாராஜா திரைப்படத்தையும் இயக்குனர் நித்திலன் சாமிநாதனையும் பாராட்டி வருகின்றனர். அடுத்ததாக இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி மகுடம் சூடியது மகாராஜா.

இந்நிலையில் இந்த படத்தின் 100வது நாள் வெற்றியை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். அப்போது இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் சதீஷ், ஜெகதீஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தினை நித்திலன் சாமிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
00:59
Video thumbnail
மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என். ரவி
01:04
Video thumbnail
பெட்ரோல் தட்டுப்பாடு என பரவி வரும் வதந்தியால் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வரும் வாகன ஓட்டிகள்
00:47
Video thumbnail
கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கேரளாவில் கோயிலில் தனது காதலன் பர்கான் கானை திருமணம் செய்தார்
00:29
Video thumbnail
வழிநெடுக கூட்டணி கட்சிகளின் கொடிகள், NDA பொதுக்கூட்டத்திற்கு பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
01:11
Video thumbnail
ஆர்.என்.ரவிக்கு விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக காவல் துறை மரியாதை
01:00
Video thumbnail
நொய்டாவில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டர்களை வாங்கி செல்லும் மக்கள்
01:19
Video thumbnail
துபாயில் சிக்கிய நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார்
00:57
Video thumbnail
NDAல் தவெக? விஜயிடம், பவன் கல்யாண் பேச்சுவார்த்தை
01:13
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் தவெக?
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img