நடிகர் அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
படமானது இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இவரது நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ஆகிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் திரைத்துறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களில் அஜித் – ஷாலினி ஜோடியும் ஒன்று. இருவரும் தங்கள் குழந்தைகளுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
அதே சமயம் நடிகர் அஜித் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதை வழக்கமாக வைத்திருப்பார். அந்த வகையில் படப்பிடிப்பு முடிந்ததும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவார்.
இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து ஸ்பெயின் நாட்டில் நடக்கும் கால்பந்து போட்டியை காண்பதற்காக சென்றுள்ளனர். அங்கு அஜித் – ஷாலினி இருவரும் ஜாலியாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் கேஷுவலாக நடந்தாலும் மாஸாக நடந்து வருகிறார் என்று இந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.