spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் வைபவ், சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதேசமயம் இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக ரணம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் வைபவ்.

அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இந்த படத்தினை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிஜோ டாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் வைபவ் தவிர ஆனந்தராஜ், அதுல்யா ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

காமெடி கலந்த கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை விக்ரம் ராஜசேகர் மற்றும் அருண் கேசவ் இயக்கியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று (அக்டோபர் 7) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Video thumbnail
குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுப் பெட்டகங்களை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
01:34
Video thumbnail
"இதனால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.." அமைச்சர் அருண்ராஜ்
01:44
Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
Video thumbnail
"திரும்பவும் ரஜினி சாருடன் படம்.. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு நன்றி”- நடிகை சிம்ரன்
01:34
Video thumbnail
40 வருஷத்துக்கு முன்ன நாங்க எடுத்த முடிவு.. ரஜினி குறித்து மேடையில் சொன்ன கமல்
02:03
Video thumbnail
பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்.!
01:16
Video thumbnail
"கமல் செஞ்ச உதவிக்கு.." ரஜினி சொன்ன உண்மை நிகழ்வு..
02:03
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img