பிரபாஸ் படத்தில் நடிகர் மம்மூட்டி லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரபாஸ் படத்தில் நடிகர் மம்மூட்டி லேட்டஸ்ட் அப்டேட்!நடிகர் பிரபாஸ் கடைசியாக கல்கி 2898AD எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து பிரபாஸ் தி ராஜா சாப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம் நடிகர் பிரபாஸ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் 2, சந்திப் ரெட்டி வாங்க இயக்கத்தில் ஸ்பிரிட் ஆகிய படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இதில் ஸ்பிரிட் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதாவது பிரபாஸின் 25 வது படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது.

இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்ப்ரிட் திரைப்படமானது 2026 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 8 மொழிகளில் வெளியாக இருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

 

Video thumbnail
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் இந்துத்துவா கும்பல்
02:01
Video thumbnail
மகனின் பிறந்தநாளை நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொழிலதிபர்..
00:53
Video thumbnail
ராகுல் காந்தியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
00:19
Video thumbnail
"தோனி CAPTAINCY ரொம்ப பிடிக்கும்" மனம் திறந்த முதல்வர்
00:48
Video thumbnail
நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன்
01:15
Video thumbnail
ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன?
01:31
Video thumbnail
தினமலர் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையா? கடுப்பான ரங்கராஜ் பாண்டே | ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன? | RSS | BJP
13:02
Video thumbnail
“சினிமாவில் மின்னும் எல்லா நட்சத்திரமும் உதயசூரியன் ஆக முடியாது” – அமைச்சர் கோவி.செழியன்
02:05
Video thumbnail
அம்பத்தூரில் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சேகர்பாபு
01:00
Video thumbnail
SIR-க்கு எதிராக தமிழ்நாட்டில் முதன் முதலில் கண்டனம் அறிக்கையை அறிவித்தது தவெக தான் | RajMohan | TVK
04:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img