spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மீண்டும் தனுஷுடன் நடிப்பதை உறுதி செய்த நித்யா மேனன்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மீண்டும் தனுஷுடன் நடிப்பதை உறுதி செய்த நித்யா மேனன்!நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் உருவாகி இருந்த திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பெயர் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். நேற்று (அக்டோபர் 8) புதுடெல்லியில் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது நித்யா மேனன் மிகுந்த மகிழ்ச்சியுடன் விருதினைப் பெற்றார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நித்யாமேனன், தான் அடுத்தது தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி தனுஷ் தற்போது இயக்கி நடித்துவரும் இட்லிகடை திரைப்படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நித்யா மேனனின் கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img