spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ் கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ் கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் பீட்சா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி ட்ரெண்டிங் இயக்குனராக மாறியுள்ளார்.

அடுத்தது சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதற்கிடையில் இவர் ஸ்டோன் பெஞ்ச் என்ற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் (Snakes & Ladders) என்ற வெப் தொடரை தயாரித்திருக்கிறார். இந்த வெப் தொடரில் நந்தா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீஜித் ரவி, சம்ரித் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

அசோக் வீரப்பன், பரத் முரளிதரன், கமலா ஆல்கமிஸ் ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கின்றனர். பிரித்வி சந்திரசேகர் இதற்கு இசையமைத்திருக்கும் நிலையில் விக்னேஷ் ராஜ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். திரில்லர் கதை களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த வெப் தொடர் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த வெப் தொடரின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் சில சிறுவர்கள் டாலர் ஒன்றை கண்டெடுக்கின்றனர். அந்த டாலரை தேடி ஒரு கும்பல் அலைகிறது. அந்த டாலரில் என்ன இருக்கிறது? எதற்காக அந்த டாலரை பலரும் தேடுகிறார்கள்? என்பதுதான் இந்த வெப் தொடரின் கதை போல் தெரிகிறது. இந்த வெப் தொடர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video thumbnail
கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:45
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் வழிபாடு
01:48
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு
02:04
Video thumbnail
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது..
00:47
Video thumbnail
மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; நல்வாய்ப்பாக மூன்று பேர் உயிர்தப்பினர்.
00:17
Video thumbnail
தாய்க்காக மகன் கட்டிய தாஜ் மஹால்.. ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
00:40
Video thumbnail
2 சிறுநீரகங்கள் தானம் | உடல் உறுப்பு கொடையாளிக்கு அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி.
01:15
Video thumbnail
புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா | மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் கோலாகலம்.
02:05
Video thumbnail
திருமணம் குறித்த மகள் திவ்யாவின் பேச்சுக்கு ஆதரவு குரல் கொடுத்த சத்யராஜ்
01:23
Video thumbnail
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் - டிரோன் காட்சிகள்
01:12
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img