spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

இன்று வெளியாகும் ‘டிராகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இன்று வெளியாகும் ‘டிராகன்’ படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்! டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதைத் தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இந்திய அளவில் பிரபலமானது. அடுத்ததாக தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிராகன் திரைப்படத்தை விஜயின் கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (அக்டோபர் 12) காலை 11 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மதியம் மூன்று மணியளவில் இரண்டாவது போஸ்டரும் மாலை 6 மணி அளவில் மூன்றாவது போஸ்டரும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
நாகரீக அரசியலில் நடை பயில கற்றுக் கொடுத்தவர் எங்கள் வெற்றித் தலைவர் (விஜய்)
00:49
Video thumbnail
சென்னை அசோக் பில்லர் அருகே பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த லாரியில் ஏசி வெடித்து விபத்து
01:12
Video thumbnail
கோவை ஈஷா மைய மகா சிவராத்திரி விழா.. பக்தி பரவசம் பொங்க மெய் மறந்து ஆனந்த நடனம் ஆடிய நடிகைகள்
01:01
Video thumbnail
திமுக மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை!
01:00
Video thumbnail
'MY LORD' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி படக்குழுவை அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா
00:24
Video thumbnail
பாட்டு பாடி காதலர் தினம் வாழ்த்து கூறிய நடிகர்கள் பிரபுதேவா மற்றும் வடிவேலு..
00:54
Video thumbnail
நமது அரசின் திட்டங்கள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு
00:48
Video thumbnail
"விசில் ரொம்ப அடிக்காதீங்க.." மேடை ஏறியதுமே அன்புமணி கலகலப்பு
00:36
Video thumbnail
திருப்பத்தூர் திமுக பயிற்சி மாநாடு | ரயிலில் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
01:39
Video thumbnail
எவ்வளவு பணம் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்கோங்க.. எல்லாம் உங்க பணம் தான் - விஜய்
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img