spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் ‘PHOENIX’ – ரிலீஸ் டேட் அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் ‘PHOENIX’ -  ரிலீஸ் டேட்  அறிவிப்பு!விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் PHOENIX படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் வாரிசு நடிகர்கள் பலர் திரைத்துறையில் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம் நடிகர்களாக மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருபவர்களும் உண்டு. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். அதாவது ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் PHOENIX – வீழான் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் ஷாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.

பின்னர் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன் போஸ்டர் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img