spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வொர்ஸ்ட் ஸ்டூடண்டாக பிரதீப் ரங்கநாதன் ‘டிராகன்’ பட லோக்கலான ஃபர்ஸ்ட் லுக் .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வொர்ஸ்ட் ஸ்டூடண்டாக பிரதீப் ரங்கநாதன்  ‘டிராகன்’ பட லோக்கலான ஃபர்ஸ்ட் லுக் .
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. ஆரம்பத்தில் இயக்குனராக திரைத்துறையில் நுழைந்த பிரதீப் ரங்கநாதன் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் எல்ஐகே எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

அதேசமயம் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்திருக்கிறாா். நிகித் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். பிரதீப் ராகவ் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் பஸ் ஒன்றின் மேல் லோக்கலான லுக்கில் லுங்கி கட்டிக்கொண்டு அமர்ந்து தம் அடித்துக் கொண்டிருக்கிறார் பிரதீப்.

மேலும் அந்த பஸ்ஸில் வொர்ஸ்ட் ஸ்டூடண்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தது இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் மற்ற இரண்டு போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய்
01:04
Video thumbnail
விஜய் வரவால் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு? திமுகவிற்கா? அதிமுகவிற்கா?
01:52
Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்
00:40
Video thumbnail
திமுக, அதிமுக, தவெக அமைச்சரவை பட்டியல் தயார்… யார் ஆட்சி அமைப்பார்கள்?
01:18
Video thumbnail
விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும்? எவ்வளவு சீட் பெறுவார்?
01:57
Video thumbnail
2026 தேர்தலில் 85 சதவீதம் வாக்கு பதிவு?
01:53
Video thumbnail
2026 தேர்தலில் 85% வாக்குப்பதிவு? | விஜய் வரவு யாருக்கு பாதிப்பு? | திமுகவிற்கா? அதிமுகவிற்கா? | DMK
19:30
Video thumbnail
கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:45
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் வழிபாடு
01:48
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு
02:04
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img