‘பிளாக்’ படத்தின் வெற்றியில் நெகிழ்ச்சியடைந்த ஜீவா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 ‘பிளாக்’ படத்தின் வெற்றியில்  நெகிழ்ச்சியடைந்த ஜீவா!பிளாக் திரைப்படம் பேராதரவை பெற்று வரும் நிலையில் ஜீவா நெகழ்ச்சி அடைந்துள்ளார். நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் ராம், ஈ, சிவா மனசுல சக்தி, ரௌத்திரம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது நடிப்பில் அடுத்ததாக அகத்தியா எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர் பிளாக் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜீவா உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் கே ஜே சுப்ரமணி இயக்கியிருக்கிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. சாம் சி எஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த அக்டோபர் 11 சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் ஜீவா செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “நீண்ட நாள் கழித்து ஒரு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு வந்திருக்கிறேன். பிளாக் படத்தின் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இன்னும் பல வெற்றி படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய டிஷ்யூம் படத்தில் ‘கைத்தட்டலுக்கு என்கிற ஜாதி’என்ற வசனம் ஒன்றே பேசி இருப்பேன். அது மாதிரி பாராட்டு கிடைப்பதற்காக தான் தாங்கள் பல முயற்சிகள் எடுக்கிறோம்.

இன்னும் நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது. இது மாஸ் படமோ காமெடி படமோ இல்லை. இந்த படத்துல அடுத்தடுத்து என்ன இருக்கும் என்ற மாதிரியான படம் தான் இது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சிகளை படமாக்குவோம். எனக்கே படம் பார்க்கும்போது தான் கோர்வையாக புரிந்தது. மக்களுடன் பார்க்கும்போது எனக்கே புதிதாக இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.

Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
Video thumbnail
பாஜகவுக்கு, திமுக மீது ஏன் அவ்வளவு வன்மம்
00:54
Video thumbnail
2026 தேர்தலில் புதிய கூட்டணி | விஜய் - சீமான் - அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு?
00:46
Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img