spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்.கேரளாவில் அழகு நிலையம் ஆரம்பித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபரிடம் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மாய மாகியுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கே அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்கிற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்.

அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும் அதில் அதிக வருமானம் வரும் என்றும் அந்த தொழிலில் என்னை முதலீடு செய்ய சொன்னார். அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும் , நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார்.

நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பலமுறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் போலீசார் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. எனவே என்னை மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். எனது பணத்தையும் மீட்டு தர உதவிட வேண்டுமென்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது, விசாரணை செய்த நீதிபதி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

Video thumbnail
திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா? | விஜய் முதல்வராகிறார் | TVK | Vijay | DMK MK Stalin | ADMK EPS
17:02
Video thumbnail
விஜய் ஆட்சியமைக்க தி.மு.க எந்த இடையூறும் செய்யாது
01:28
Video thumbnail
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏன்?
01:49
Video thumbnail
ஆட்சி அமைக்க விஜயை ஆளுநர் அழைக்க வேண்டும் - நடிகர் தம்பி ராமையா வீடியோ வெளியீடு
02:53
Video thumbnail
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏன்? | நெருக்கடி கொடுக்கும் பாஜக | TVK | Vijay | Governor | BJP
14:57
Video thumbnail
மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்
02:20
Video thumbnail
எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி பயிற்சி தொழிலாளர்கள் போராட்டம்
02:06
Video thumbnail
கண்டெய்னர் ரகசிய அறையில் 717 கிலோ கஞ்சா கடத்திய கும்பலை மத்திய பிரிவு கைது செய்தது
01:16
Video thumbnail
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்
00:46
Video thumbnail
விஜயை உற்சாகமாக வாழ்த்திய காங்கிரஸ் தலைவர்கள்
02:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img