கன்னியாகுமரி மாவட்டம் : சிறைக்கைதி தப்பி ஓட்டம் – பேலீசாா் தேடி வருகின்றனா்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை மற்றும்  கொள்ளை உள்ளிட்ட   பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட  கொள்ளையன் சதீஷ் (29) தப்பி ஓட்டம். தப்பி ஓடிய சிறை கைதியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு கடற்கரை சாலை வெட்டுமடை பகுதியில் உள்ள இசக்கியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் இருந்த 3 விளக்குகளை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  நள்ளிரவு இரண்டு  மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் கோயில் அருகே படுத்து கிடந்த கணேசன் என்ற முதியவரை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். தொடர்ந்து கோயில் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கு தூங்கி கொண்டிருந்த ஊழியர் முகமது சுகேபு வைத்திருந்த 20-ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போணை திருடியதோடு மண்டைக்காடு பகுதிக்கு சென்று சுனிதா குமாரி என்பவரது வீட்டில் இருந்த பைக்கையும் திருடி அருகில் இருந்த விநாயகர் கோயில் உண்டியலையும் தூக்கிய மர்ம நபர்கள் அங்கிருந்து பைக் மூலம் தப்பி சென்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அனைத்து சம்பவங்களிலும் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  : சிறைக்கைதி தப்பி ஓட்டம் - பேலீசாா் தேடி வருகின்றனா்.

விசாரணையில் கொள்ளையன் கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த 25-வயதான கவாஸ்கர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (28) என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும்  கைது செய்த குளச்சல் போலீசார் அவரிடம் இருந்து 3-விளக்கு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ததோடு அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். சிறிது காலம் பாளையங்கோட்டை சிறையில் இருந்த இவர்களில் சதீஷ் நாகர்கோவில் சிறைக்கு மாற்றப்பட்டார். ஒரு வருடமாக சிறையில் இருந்த  சதீஷை யாரும் ஜாமினில் வெளியே எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சதீஷுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால்     இவரை போலீசார் பாதுகாப்புடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அதிகாலை காவலுக்கு இருந்த போலீசாரை ஏமாற்றிவிட்டு மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார் சதீஷ்.  இந்நிலையில் தப்பித்து ஓடிய கைதி சதீஷை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும்  சிறை கைதி மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்ற சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img