spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழகம் : 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் : 19 மாவட்டங்களில்  இன்று  கனமழைக்கு வாய்ப்பு.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் – அறிவித்த தேவஸ்தானம்

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Video thumbnail
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி | கருத்துக் கணிப்பு முடிவுகள் | DMK | MK Stalin | ADMK | EPS |TVK Vijay
12:35
Video thumbnail
பெங்களூருவில் நேற்று (ஏப்.29) ஆலங்கட்டி மழை
00:25
Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய்
01:04
Video thumbnail
விஜய் வரவால் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு? திமுகவிற்கா? அதிமுகவிற்கா?
01:52
Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்
00:40
Video thumbnail
திமுக, அதிமுக, தவெக அமைச்சரவை பட்டியல் தயார்… யார் ஆட்சி அமைப்பார்கள்?
01:18
Video thumbnail
விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும்? எவ்வளவு சீட் பெறுவார்?
01:57
Video thumbnail
2026 தேர்தலில் 85 சதவீதம் வாக்கு பதிவு?
01:53
Video thumbnail
2026 தேர்தலில் 85% வாக்குப்பதிவு? | விஜய் வரவு யாருக்கு பாதிப்பு? | திமுகவிற்கா? அதிமுகவிற்கா? | DMK
19:30
Video thumbnail
கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:45
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img