கன்னயகுமரி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் மேலும் – 4 போ் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக செயல்பட்டு “டபுள் கேம்” விளையாடி இருபது இசக்கிமுத்துவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்து இசக்கிமுத்து தனது கூட்டாளிகள் நான்கு பேர் உதவியுடன் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்து எரித்து விட்டு பின்னர் தனக்காக கொலை செய்து உதவிய கூட்டாளிகளை போலிஸாரிடம் சிக்க வைக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் மட்டும் கொலை செய்ததாக நேராக போலிஸாரிடம் சென்று சரண் அடைந்து தனக்கு உதவிய கூட்டாளிகளை காப்பாற்ற சரண் அடைவதாக நாடகமாடியது போலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

"டபுள் கேம்" வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது

கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் தன்னுடைய ஒரு வழக்கு தொடர்பாக தக்கலை சாரல்விளை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சுபி (50) என்பவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாடி தனக்கு வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு ஒப்பு கொண்ட வழக்கறிஞர் வழக்கையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வழக்கின் போக்கு இசக்கி முத்துக்கு சாதகமாக அமையவில்லை என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞரான கிறிஸ்டோபர் சுபியிடம் பலமுறை கேட்டுள்ளார்.

ஆனால் வழக்கறிஞர் சரியான பதிலை கூறாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து சந்தேகம் அடைந்த இசக்கிமுத்து தன் வழக்கறிஞர் நடத்தை குறித்து ரகசியமாக விசாரனை செய்துள்ளார். இதில் தனது வழக்கறிஞர் தனக்கு ஆதரவாக வழக்காடுவதாக கூறி விட்டு மறைமுகமாக தனது எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக செயல்பட்டு “டபுள் கேம்” விளையாடி வருவதை இசக்கிமுத்து கண்டு பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது ஆவணங்களை தருமாறு வழக்கறிஞரிடம் இசக்கிமுத்து கேட்டு வற்புறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சமாதன பேச்சுவார்த்தை நடத்த இசக்கிமுத்து வீட்டிற்கு வழக்கறிஞர் வந்ததாக தெரிகிறது.

"டபுள் கேம்" வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது

அங்கு வைத்து இருவரும் மது அருத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த மதுபோதையில் வழக்கறிஞருக்கும், இசக்கிமுத்துக்கும் வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தனக்கு நம்பிகை தூரோகம் செய்த வழக்கறிஞர் மீது ஏற்கனவே கடும் ஆத்திரத்தில் இருந்த இசக்கிமுத்து அரிவாளை எடுத்து வழக்கறிஞரை தலை,கை,கால் என பல இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாகவும்,பின்னர் யாரும் அறியா வண்ணம் வழக்கறிஞரின் உடலை பீமநேரியில் உள்ள சாந்தியா குளத்தின் கரையோரம் உடலை போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் போலிஸாரிடம் சென்று தான் கொலை செய்துள்ளதாக கூறி வாக்குமூலம் அளித்து இசக்கிமுத்து சரண் அடைந்துள்ளார்.

சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் – தாமதமாக இன்று மாலை செல்லும்.

சரண் அடைந்த கொலையாளி இசக்கி முத்துவிடம் ஆரல்வாய்மொழி போலிஸார் விசாரனை நடத்தினார்கள். இதில் திடிர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது இசக்கிமுத்து தனது கூட்டாளிகள் நான்கு பேர் உதவியுடன் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்து எரித்து விட்டு பின்னர் தனக்காக கொலை செய்து உதவிய கூட்டாளிகளை போலிஸாரிடம் சிக்க வைக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் மட்டும் கொலை செய்ததாக நேராக போலிஸாரிடம் சென்று சரண் அடைந்து தனக்கு உதவிய கூட்டாளிகளை காப்பாற்ற சரண் அடைவதாக நாடகமாடியது போலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் நாகர்கோயில் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த ஐயப்பன் (26) ,தளவாய்(26) திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த வன்னிய பெருமாள்(26) திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டி என நான்கு பேரை குமரி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து தொடர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
Video thumbnail
பெரியார் மண்ணில் பாஜகவின் மதவேஷம் எடுபடாது
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img