‘டிராகன்’ படத்தின் அப்டேட் போஸ்டா்களை வெளியிட்ட படக்குழு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

‘டிராகன்’ படத்தின் அப்டேட் போஸ்டா்களை வெளியிட்ட படக்குழு!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பின்னர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் விக்னேஷ் சிவனின் எல்ஐசி திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். எல்ஐசி படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதே சமயம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதன் மூலம் அவர் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பிரேமம் பட ஹீரோ …..வெளியான புதிய தகவல்!

அதைத்தொடர்ந்து கயடு லோகர் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் விஜய் சித்து அன்பு என்ற கதாபாத்திரத்திலும் ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மிஸ்கின் மயில்வாகனன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கௌதம் வாசுதேவ் மேனன் வேல் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. அத்துடன் கே எஸ் ரவிக்குமார், பரசுராம் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஜார்ஜ் மரியான் தனபால் எனும் கதாபாத்திரத்திலும், இந்துமதி சித்ரா எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிராகன் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்
00:32
Video thumbnail
நாடாளுமன்றத்திற்கு GoodBye சொல்லிட்டு வந்துட்டேன்
00:49
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது
00:32
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது | மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
05:16
Video thumbnail
சின்னத்திரை நடிகை ஆவடி காவல் ஆணையரிடம் புகார்.. பெரும் பரபரப்பு | Serial Actress | Avadi | Police
08:27
Video thumbnail
முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு?
01:08
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார் | கலக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி
11:19
Video thumbnail
2026 வெல்லப்போவது யார்? பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள புதிய சர்வே..
01:09
Video thumbnail
2026 வெல்லப்போவது யார்? | திமுக - அதிமுக கடும் போட்டி | பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள புதிய சர்வே
13:33
Video thumbnail
இன்று தமிழ்நாடு நாள் | திருச்சி சிவா பேசியது என்ன தவறு | புரிந்து கொள்ளாத அரசியல் தலைவர்கள்
11:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img