சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பிரேமம் பட ஹீரோ …..வெளியான புதிய தகவல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுவருகின்றது.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பிரேமம் பட ஹீரோ .....வெளியான புதிய தகவல்!,

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதில் சுதா கொங்கரா, சூர்யா நடிப்பில் இயக்க இருந்த புறநானூறு திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு சில காரணங்களால் படத்தில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் நிலையில் விரைவில் புறநானூறு என்ற தலைப்பு மாற்றி வைக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது.

233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்த -பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

பின்னர் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் அதர்வா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புறநானூறு திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க இருக்கிறாராம். இது தொடர்பான பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img