spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 14 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 15வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. குஜராத் அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 15வது ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இரண்டு தோல்வி ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பெங்களூர் அணி 3 முறையும் லக்னோ அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து லக்னோ அணி முதலாவது பேட்டிங் செய்யவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுலும் குயின்டன் டிகாக்கும் களமிறங்க உள்ளனர்.

 

 

Video thumbnail
மோடியை எச்சரித்த ஸ்டாலின் | பாஜக அரசின் மிக மோசமான திட்டம் | MKStalin | Modi | DMK | BJP
10:30
Video thumbnail
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி நிலவரம் | விஜய்யின் செல்வாக்கு மொத்தமாக முடிந்தது | TVK | Vijay
18:38
Video thumbnail
மதுரவாயல் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..
01:47
Video thumbnail
"உங்களுக்காக இந்த இடத்தை உருவாக்கி தருவேன்" - அமைச்சர் நாசர் வாக்குறுதி
01:13
Video thumbnail
"81 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.." - அமைச்சர் நாசர்..
00:39
Video thumbnail
"தமிழக முதல்வரே நேரடியாக வந்து ஆய்வு செய்து.." - அமைச்சர் நாசர்..
00:51
Video thumbnail
மாஃபா பாண்டியராஜன் செய்த துரோகம்..
01:51
Video thumbnail
ஆவடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
01:21
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்..- தவெக தலைவர் விஜய்..
01:19
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.. - தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்
12:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img