spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 15 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 16வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இரண்டு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

 

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 16வது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணியையும் வீழ்த்தியது. டெல்லி அணியை பொறுத்தவரை முதல் இரு ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. அடுத்து நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 16 முறையும் டெல்லி அணியும் 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயர்ஸ் அய்யர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி பந்து வீச உள்ளது.

Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img