spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற 18வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஐதராபாத் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது. இரண்டாவது ஆட்டத்தில் மும்பை அணியை அதிரடியாக வீழ்த்தியது 3வது ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது. சென்னை அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. 3வது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 14 முறையும் ஐதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவிந்திரா 12 ரன்களும் ருத்ராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்ததாவது களமிறங்கிய சிவம் துபே 45 ரன்களும் ஜடேஜா 31 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 31 ரன்னிலும் அபிஷெக் ஷர்மா 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஏய்டன் மார்க்ராம் 50 ரன்னிலும் சபாஷ் அகமது 18 ரன்னிலும் ஆட்டமிந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அபிஷேக் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.

Video thumbnail
பெங்களூருவில் நேற்று (ஏப்.29) ஆலங்கட்டி மழை
00:25
Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய்
01:04
Video thumbnail
விஜய் வரவால் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு? திமுகவிற்கா? அதிமுகவிற்கா?
01:52
Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்
00:40
Video thumbnail
திமுக, அதிமுக, தவெக அமைச்சரவை பட்டியல் தயார்… யார் ஆட்சி அமைப்பார்கள்?
01:18
Video thumbnail
விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும்? எவ்வளவு சீட் பெறுவார்?
01:57
Video thumbnail
2026 தேர்தலில் 85 சதவீதம் வாக்கு பதிவு?
01:53
Video thumbnail
2026 தேர்தலில் 85% வாக்குப்பதிவு? | விஜய் வரவு யாருக்கு பாதிப்பு? | திமுகவிற்கா? அதிமுகவிற்கா? | DMK
19:30
Video thumbnail
கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:45
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் வழிபாடு
01:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img