தமிழ்நாட்டின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி – செல்வபெருந்தகை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாட்டின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி – செல்வபெருந்தகை

ஒன்றிய பாஜக அரசு சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி - செல்வபெருந்தகை

மக்களவை தேர்தல் பரப்புரையை இன்று முதல் தொடங்கியுள்ள செல்வப்பெருந்தகை, இந்தியா கூட்டணியின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சென்னை அரும்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு சேகரித்தார்.

பரப்புரையில் பேசிய செல்வப்பெருந்தகை, நடைபெறும் தேர்தல் எடுப்பவருக்கும், கொடுப்பவருக்கும் இடையே நடக்கும் தேர்தல். மக்களிடம் வரிப்பணத்தை எடுப்பவர் மோடி, கொடுப்பவர் மு.க.ஸ்டாலின். நாம் பணத்தை எடுப்பவரை ஆதரிக்க போகிறோமோ என கேள்வியெழுப்பினார்.

மக்களிடம் வரிப்பணத்தை எடுப்பவர் மோடி, கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்த எடப்பாடியை ஆதரிக்கப்போகிறோமோ என கேள்வியெழுப்பிய அவர், காலை ஒரு நிறுவனத்திற்கு ரெய்டு செல்லும், மாலை பா.ஜ.க வங்கி கணக்கிற்கு பணம் வரும். இந்த ஆட்சி தேவையா? ஆளுங்கட்சி பாஜக இல்லாத மாநிலங்களில் முதலமைச்சர்களையும், அமைச்சர்களையும் மிரட்டி வைக்கப்படுகிறது. நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அனைவரும் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு வரி பணத்தை மோடி எடுத்த பாஜக ஆளும் மாநிலத்தில் கொடுக்கிறார். மக்களிடம் வரி பணத்தை எடுப்பவர் மோடி மக்களின் வரிப்பணத்தை எடுத்து மக்களுக்கு அளிப்பவர் நமது முதலமைச்சர் ஸ்டாலின். இராமேஸ்வரம் கோயிலை உலக தரத்திற்கு மாற்றுவேன் என கூறிய மோடி இதுவரை ஒரு துரும்பை கூட போடவில்லை. பிரதமர் மோடி இந்துக்களுக்கும் தூரோகமிழைக்கிறார் சிறுபான்மையினருக்கும் தூரோகமிழைக்கிறார் என சாடினார்.

மக்களிடம் வரிப்பணத்தை எடுப்பவர் மோடி, கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்.

மோடியின் அராஜக ஆட்சி வடகொரியாவில் பார்த்திருக்கும் அராஜக ஆட்சி. சீனாவில் பார்த்திருக்கும் ஒரே தேர்தல், ஒரு அதிபர் முறையை போல், இந்தியாவில் கொண்டுவதற்கு மோடி துடித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் சாதி, மதம், வேதமின்றி அனைவரும் சமம் என ஒற்றுமையாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இங்கு கலவரத்தை ஏற்படுத்த, பிளவுபடுத்த முயற்சித்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் துணை போனவர் எடப்பாடி பழனிச்சாமி. ஒன்றிய பாஜக அரசு சொன்ன இடத்தில் எல்லாம் எடப்பாடி கையெழுத்து போட்டார். இன்றைக்கு பா.ஜ.க உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நீலிக்கண்ணீர் வடிக்கிறார், என்றார்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img