சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு.ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் DJ இசைக்கு நடனமாடிய சமர் பில்லோர் 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறார். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், DJ சத்தம் கேட்டு கூட்டத்துடன் சேர்ந்து நடனமாடினான். கொண்டாட்டத்தின் போது திடீரென மயங்கி விழுந்திருக்கிறான் அந்த சிறுவன். அவனது உடல்நிலையை அறியாமல், சுற்றி இருந்தவர்கள் நடனமாடினர். அப்போது சிறுவனின் தாயார் ஜமுனா தேவி உதவி கோரி கதறி அழுதிருக்கிறார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சமரின் தந்தை கைலாஷ் பில்லோர், டிஜே-யின் சத்தம் “ஆபத்தான சத்தமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.எத்தனையோ எச்சரித்தும் அணைக்கப்படவில்லை, அந்த சத்தத்தை யாராலும் தடுக்கவும் முடியவில்லை போல் தான் இருந்தது . எங்கள் மகனின் உயிர் போனாது தான் மிச்சம் எனவும் “DJ சத்தம் ‘ஆபத்தான சத்தமாக’ இருந்தது’ எனவும் சிறுவனின் தந்தை கைலாஷ் கூறியுள்ளார்.

ஸ்பீக்கர்கள் அளவு தொடர்ந்து 90 முதல் 100 டெசிபல்களுக்கு(decibels) இடையில், அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் அதிகமாக இருந்தது என தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் பகலில் 55 டெசிபலுக்கும், இரவில் 45 டெசிபலுக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என விதிகள் உள்ளன. அதே போல் அமைதியான மண்டலங்களில்,பகலில் 50 டெசிபல்கள் மற்றும் இரவில் இன்னும் குறைவாக 40 டெசிபல்கள் என்ற வரம்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img