spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரஜினிக்கு பிறகு சமந்தா தான் இயக்குனர் த்ரிவிக்ரம் பேச்சு!தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென தனி ரசிகர;கள் பட்டாளமே இருக்கிறது. தமிழில் நடிகை சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்றுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி நடிகை சமந்தா, மம்மூட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அல வைகுந்தபுரமுலு , குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் த்ரிவிக்ரம் நடிகை சமந்தா குறித்து பேசி உள்ளார்.

அதாவது நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிக்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமந்தா, த்ரிவிக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது ஆலியா பட், திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சமந்தா ஒரு ஹீரோ என்றும் சமந்தாவும் நானும் த்ரிவிக்ரம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் திரிவிக்ரம், “ரஜினிகாந்துக்கு பிறகு சமந்தா தான் அனைத்து மொழிகளிலும் பரவலான புகழைப் பெற்றுள்ளார்” என்றார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img