spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நிச்சயதார்த்தம் நடந்து, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நிச்சயதார்த்தம் நடந்து, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது.கல்லூரி காலம் முதல் 6 ஆண்டுகளாக காதலித்து, தனிமையில் வாழ்ந்து, திருமணம் நிச்சயதார்த்தமும் முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்த தனியார் வங்கி மேளாளரை கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார் பள்ளியின் தாளாளராக பணியாற்றி வருகிறார். இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு படித்து வந்தபோது ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

சதீஷ்குமார் தற்போது தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு கடந்த 2023ம் ஆண்டு தெரியவந்துள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு, மார்ச் மாதம், 26ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பின்னர் மூன்று மாதத்தில் சதீஷ்குமார் திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறி மறுப்பதாகவும் இது குறித்து அந்தப் பெண் சதீஷின் வீட்டிற்கு சென்று கேட்டபோது தான் வேலை செய்யும் வங்கியில் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரை சதீஷ் காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதோடு அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இருவரும் காதலித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை சதீஷ் பலமுறை கட்டாயப்படுத்தி ஒன்றாக இருந்துள்ளதாகவும், கல்யாண மண்டபத்தை பதிவு செய்வதற்கு முன் பணமாக அந்தப் பெண்ணிடம் சதீஷின் அம்மா மல்லிகா கேட்டதின் பேரில் அந்த பெண் அவரது வீட்டிற்கு தெரியாமல் வங்கியில் லோன் எடுத்து பணம் கொடுத்து அதற்கு வட்டியுடன் 1.70 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காதலித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் தன்னுடன் தனிமையில் இருக்கும்போது தனக்குத் தெரியாமல் போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்ததாகவும் அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை வெளியில் விடாமல் இருப்பதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் பல்லாவரம் போலீசார் சம்பவம் தொடர்பாக 296(b), 115(2), 64, 318(2), 351(2), ஆகிய ஐந்து பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img