அரபோா் இயக்கம் : செல்லாத நீதிமன்ற ஆணைகள் – 411 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்க்குமா? அரசு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அமைச்சர் ராஜகண்ணன் மகன்கள் மூலம் ஆக்கிரமித்திருக்கும் அரசாங்க நிலத்தை குறித்து நீதிமன்ற தீர்ப்பு விவரங்களை : அறப்போர் வெளியிட்டுள்ளது.

அரபோா் இயக்கம் : செல்லாத நீதிமன்ற ஆணைகள் - 411 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்க்குமா? அரசு!
அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது மகன்கள் மூலம் சுமார் 5 ஏக்கர் சென்னை GST சாலையில் ரூ 411 கோடி மதிப்புள்ள அரசாங்க நிலத்தை எப்படி ஆக்கிரமித்து உள்ளார் என்பதை அறப்போர் இயக்கம் கடந்த வாரம் ஆதாரங்களோடு புகார் கொடுத்திருந்தனா். அதற்கு பிறகு பதில் அளித்த அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் இது அரசாங்க நிலமே இல்லை என்றும் அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று ஆணை வாங்கி உள்ளதாகவும் அரசு அதிகாரி அரசாங்க நிலம் தான் என்று சொல்லுவாா்கள் என்றும் கூறினார். நாம் அப்படி என்னதான் வழக்குகள் சொல்கிறது என்று பார்த்தால் அதில் நடந்த மோசடி மேலும் பெரிதாக உள்ளது! சம்பந்தப்பட்ட நிலம் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை வருவாய் மாவட்டத்திற்குள் வருகிறது, ஆனால் ராஜகண்ணப்பன் மகன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகள் நுழைய தடையாணை வழக்கு தொடரப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அரசு அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்தில் அவா் மீண்டும் அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

கூடலூர் : மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) விற்க முயன்றவா்கள் – கைது

மேலும், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திற்கு, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற வரம்புக்குள் வராது என்றும் விளக்கம் அளித்துள்ளதாக ஜெயராமன் தெரிவித்துள்ளார்.தவறான நீதிமன்றத்தில் போய் வாங்கிய செல்லாத நீதிமன்ற ஆணைகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஜெயராமன், தமிழ்நாடு அரசு இனியாவது இந்த 5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்றும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய அமைச்சர் ராஜகண்ணப்பன், அவரது மகன்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு இனியாவது இந்த 5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு எடுக்குமா என கேள்வியும் எழுப்பியுள்ளாா்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img