கூடலூர் : மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) விற்க முயன்றவா்கள் – கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேனி மாவட்டம் கூடலூரில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) தயாரித்து விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்துள்ளனர்.

கூடலூர் :  மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்)  விற்க முயன்றவா்கள் - கைது

தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சாவினால் தயார் செய்யப்பட்ட ஆயில் (எண்ணெயை) விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் குமுளி செல்லும் கேரள நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா ஆயில் (எண்ணெய்யை) விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கூடலூர் நகர் பகுதியை சேர்ந்த நடராஜன், பிரபு மற்றும் லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த நடாராஜன் என்பதும் தெரிய வந்தது. மூன்று பேரும் கஞ்சாவில் (எண்ணெய்)ஆயில் தயாரித்து விற்பனை செய்ய வந்தது தெரியவந்துள்ளது.

திருப்பூர் : காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!

மேலும் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா ஆயிலையும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img