ஆவேஷம் பட இசையமைப்பாளரின் திருமண விழாவில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மலையாளம், தமிழில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருபவர் பகத் பாசில். இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டையன் திரைப்படத்தில் பேட்ரிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதே சமயம் அதற்கு முன்பாக விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். அடுத்தது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பகத் பாசில். இதற்கிடையில் இவர், ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான அவேஷம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. அதன்படி இந்த படத்திற்கு சுசின் ஷியாம் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் சுசின் ஷியாமுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்படி சுசின் ஷியாம் தனது நீண்ட நாள் காதலித்தாரா கிருஷ்ணனை பெற்றோர்கள் முன்னிலையில் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமண விழாவிற்கு நடிகர் பகத் பாசில் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான நஸ்ரியா ஆகிய இருவரும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சுசின் ஷியாம், ஆவேஷம் படத்திற்கு மட்டுமில்லாமல் கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சும்மெல் பாய்ஸ், குருப், மாலிக் ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.