தனுஷின் லேட்டஸ்ட் அப்டேட்- லப்பர் பந்து இயக்குனருடன் கூட்டணி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தனுஷின் லேட்டஸ்ட் அப்டேட்- லப்பர் பந்து இயக்குனருடன் கூட்டணி.கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் தவிர அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பிரன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்திருந்தார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் அள்ளி வருகிறது.

‘தளபதி 69’ படத்தில் இணைந்த கோட் படக்குழு முதல் பாடல் குறித்த அப்டேட்.

இந்த படத்தினை திரை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக தமிழரசன் பச்சமுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.அதாவது நடிகர் தனுஷும், தமிழரசன் பச்சமுத்துவும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இவர்களின் கூட்டணி இணைய இருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

தனுஷ் ஒரு பக்கம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்ற அடுத்த அடுத்த படங்களை இயக்கி வந்தாலும், மறுபக்கம் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img