spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வெறித்தனமான லுக்கில் ஜெயம் ரவி போஸ்டருடன் வெளியான ‘JR 34’ பட அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வெறித்தனமான லுக்கில் ஜெயம் ரவி போஸ்டருடன் வெளியான ‘JR 34’ பட  அறிவிப்பு!JR 34 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

அடுத்தது காதலிக்க நேரமில்லை, தனி ஒருவன் 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெயம் ரவி. இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்ததாக தனது 34 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தை இயக்கி வெற்றி கண்ட கணேஷ் கே .பாபு இயக்க உள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது புதிய போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டரில் ஜெயம் ரவி வெறித்தனமான லுக்கில் காட்டப்பட்டுள்ளார். மேலும் அந்த போஸ்டரை பார்க்கும்போது ஜெயம் ரவி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது போன்று தெரிகிறது. படத்தின் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நடிகர் ஜெயம் ரவி, ஆதி பகவன், நிமிர்ந்து நில் போன்ற படங்களை இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சன் கலந்த கதைகளத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
Video thumbnail
உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்
01:51
Video thumbnail
குதிரை பேரம் குறித்து விழுந்த கேள்வி - அமைச்சர் CTR நிர்மல் குமார் அழுத்தி சொன்ன பதில்
02:04
Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img