spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜெயிலர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்விருக்கும் ஜூனியர் என்டிஆர்?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜெயிலர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்விருக்கும் ஜூனியர் என்டிஆர்? ஜெயிலர் பட இயக்குனா் நெல்சன் திலீப் குமாருடன் ஜூனியர் என்டிஆர் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பட்டி தொட்டி எங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்தது நெல்சன் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.

இந்நிலையில் நெல்சன், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார்.

எனவே ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இவர் இயக்க இருக்கும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் தேவரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதேசமயம் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.

 

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img