படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார் – கமல்ஹாசன்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார் - கமல்ஹாசன் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

அதேசமயம் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

அடுத்ததாக அன்பறிவு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன். அதுமட்டுமில்லாமல் அட்லீ இயக்கத்தில் கமல்ஹாசன், சல்மான் கான் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். திடீரென கமல் ஏஐ தொழில்நுட்பம் படிக்க சென்றதற்கான காரணம் என்ன? என்று ரசிகர்கள் பலரது கேள்வி. தற்போது இது தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

‘லப்பர் பந்து’ படத்தில் நடித்ததற்காக பால சரவணனை பாராட்டிய விஜய் சேதுபதி!

அதாவது கடந்த 1997 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மருதநாயகம் எனும் திரைப்படத்தை தானே தயாரித்து இயக்கி நடிக்க இருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அப்பொழுதே அதிகமாக இருந்து வந்தது. எனவே இந்த படத்திற்காக அன்றைய முதல்வர் கருணாநிதி மற்றும்  ஆகியோரால் இந்த படத்திற்கு பூஜையும் போடப்பட்டது.

அதைத்தொடர்ந்து 30 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் வணிக ரீதியிலான சில பிரச்சனை காரணமாக படமானது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த பேட்டியில் மருதநாயகம் படம் தொடர்பான காட்சிகள் தன்னிடம் பத்திரமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆகையினால் கமல்ஹாசன் ஏஐ படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருப்பது மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்குவதற்காக தான் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி இந்த தகவல் உண்மையானால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் தகவல் இதைவிட வேறு எதுவும் கிடையாது.

Video thumbnail
ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய மோடி
00:54
Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img