அதிகாரப்பூர்வ அறிவிப்பு! -300 கோடியை தாண்டிய ‘தேவரா’

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

Official announcement, 'Devara' , 300 crores, 'Devara', cenima.ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் மூன்று நாட்களில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி இருந்த தேவரா பாகம் 1 திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.

இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் -க்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். படத்தில் வில்லனாக சைஃப் அலிகான் நடித்திருந்தார். இந்த படத்தினை கொரட்டலா சிவா இயக்கி இருந்தார். இப்படத்தினை நந்தமுரி தரகா ராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார் – கமல்ஹாசன்.

அனிருத் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி வருகிறது.அதாவது முதல் நாளில் இப்படம் 172 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அடுத்தது இரண்டாம் நாளில் கிட்டத்தட்ட 243 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. இந்நிலையில் மூன்றாவது நாளில் இப்படம் 304 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இனிவரும் நாட்களில் இப்படம் 500 கோடியை நெருங்குமா? என்பதை பாா்ப்போம்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img