spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘தளபதி 69’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘தளபதி 69’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி 69 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருந்தால் கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

அதை தொடர்ந்து விஜய் தனது 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

அதன்படி கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தினை இயக்கப் போகிறார். அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என அறிவித்திருந்தார். அப்பொழுதிலிருந்தே விஜயின் கடைசி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

அதிலும் அரசியல் தொடர்பான கதைக்களம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்நிலையில்தான் நேற்று (அக்டோபர் 1) இந்த படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து தற்போது நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் இணைந்துள்ளதாக பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இன்னும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவர காத்திருக்கின்றன. நடிகை பூஜா ஹெக்டே ஏற்கனவே விஜயுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img