spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட இசை வெளியீட்டு விழா எப்போது?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட இசை வெளியீட்டு விழா எப்போது?சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அமரன் சிவகார்த்திகேயனின் 21 வது திரைப்படம் . இந்த படத்தினை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளார் சிவகார்த்திகேயன். அதே சமயம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களை போல் இல்லாமல் இந்த படம் சிவகார்த்திகேயனை மாறுபட்ட கோணத்தில் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர காத்திருக்கிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளனர். அடுத்தது இந்த படத்தில் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img