spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘தளபதி 69’ படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘தளபதி 69’ படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த கோட் படத்திற்கு பின்னர் விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் தளபதி 69. நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாக மாறி இருப்பதால் தனது 69 வது திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என அறிவித்திருக்கிறார்.

எனவே ஆரம்பத்திலிருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. ஹெச். வினோத் இயக்க உள்ள இந்த படம் அரசியல் தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் அடுத்த ஆண்டு அக்டோபர் 2025-ல் இந்த படம் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

மேலும் வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் அக்டோபர் 5ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் போஸ்டர்களை படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அதை தொடர்ந்து பிரேமலு படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை வென்ற மமிதா பைஜூ இந்த படத்தில் இணைந்துள்ளார் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தளபதி 69 படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img