அடுத்த ஆண்டில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் ‘எல்சியு’ ஆவணப்படம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அடுத்த ஆண்டில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் ‘எல்சியு’ ஆவணப்படம்!இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர், கார்த்தி நடிப்பில் கைதி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்தது மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் எல்சியு – LCU (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) ஆவணப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் எல்சியு என்ற கான்செப்ட்டை உருவாக்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கியிருந்த கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் எல்சியு வில் அடங்கும். அடுத்தது இவர் கைதி 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில் எல்சியு உருவான விதம் குறித்து ஒரு ஆவணப்படமாக உருவாக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.அதன்படி இந்த ஆவணப்படத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன், அனிருத் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

அடுத்தது இந்த ஆவணப்படத்திற்கு பிள்ளையார் சுழி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கும் இந்த ஆவணப்படமானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

 

Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img