திகார் சிறையில் டெல்லி முதலமைச்சர்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திகார் சிறை அழைத்து செல்லப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். சிறை சாலைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட 11 நாள் அமலாக்கத்துறை விசாரணை காவல் நிறைவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 15 நாட்கள் நீதிமன்ற காவல் இன்று வழங்கப்பட்டது.
https://www.mugavari.in/mk-stalin-critizise-pm-modi/
நீதிபதி நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள திகார் சிறையில் அறை எண் 2ல் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரவிந்த் கெஜ்ரிவால் காவல்துறை வாகனத்தில் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திகார் சிறை வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள், நாங்களும் கெஜ்ரிவால் தான் என கோஷமிட்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். அதே நேரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.