மக்களவை தேர்தல் – நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் நாளை 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
ஓம் பிர்லா, ராகுல் காந்தி, சசிதரூர், நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
18 ஆவது மக்களவைக்கான தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் சுமார் 62% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது.
https://www.mugavari.in/news/tamilnadu-news/today-gold-rate-11/1875
சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், நடிகை ஹேமமாலினி காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.