மத்திய அரசு செய்யும் ஒன் சைடு கேம் – பழனிவேல் தியாகராஜன்
மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜான்சிராணி பூங்கா அருகில் பரப்புரை மேற்கொண்டார்.
பிரிட்டீஸ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதா என்பதை போல பாஜக பற்றி மக்கள் யோசிக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்து, எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கை முடக்கி சமமான தேர்தலை சந்திக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர்.
10 நாட்களுக்கு முன் ஏன் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்கிறார். புதிய சட்டத்தின் படி இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்.
இது மத்திய அரசு செய்யும் ஒன் சைடு கேம்.
என்ன தான் நடக்கிறது இந்த நாட்டில். ஒரு நாடாளுமன்ற தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்?
ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தினால் 2 வருடம் ஆகும். 543 இடங்களுக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தும் ஆணையம் எப்படி ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவீர்கள்.
ஜாமீன் கொடுக்காமல் வழக்கு நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர்.
https://www.mugavari.in/udhayanidhi-questions-pm-modi/
அன்றைக்கு சர்வாதிகார பிரிட்டீஸ் மன்னர் லண்டனில் இருந்தார். இன்று டெல்லியில் உள்ளார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும்.