பா.ம.க.வுக்கு கொள்கை, கூட்டணி எதுவும் இல்லை – ஜெயக்குமார்
பாமகவின் வளர்ச்சிக்கு அதிமுக தான் காரணம், கூட்டணி பேரத்தில் சிக்கி கொள்கையும் கோட்பாடு இல்லாமல் பாமக கூட்டணி அமைத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக கச்சத்தீவை தாரை வார்த்தது, 10 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி புரிந்த பாஜக மீட்டெடுக்க என்ன முயற்சியை செய்தது.
வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
வடசென்னை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இராயபுரம் மனோ
திரு.வி.க. நகர் தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி பகுதியில் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தொகுதியில் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்தார். வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ராயபுரம் மனோவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் .
முன்னதாக வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட ஒட்டேரி பகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிமணியை திறந்து வைத்த பின் தொகுதி பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
https://www.mugavari.in/no-action-taken-to-retrieve-katchatheevu-ezhilan/
தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி உள்ளது. திமுக வேட்பாளர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அதிமுகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு மிகப்பெரிய துரோகம் செய்தது. கச்சத்தீவு கைமீறிப் போக திமுகவே காரணம்.
திமுக தாரை வார்த்த கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய பாஜக அரசு என்ன முயற்சியை செய்தது. திமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுமே கச்சத்தீவு விவகாரத்தில் மிகப்பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக பாராளுமன்றத்தையே அதிமுக எம்பிக்கள் ஸ்தம்பிக்க வைத்தனர். கச்சத்தீவு விவகாரத்தில் 17 வருடங்களுக்கு மேலாக ஆளும் மத்திய அரசுடன் கூட்டணி வைத்த திமுக மீட்டெடுக்க என்ன செய்தது.
தேர்தல் காலத்தில் மட்டுமே திமுகவுக்கு மாநில உரிமைகள் குறித்தான அக்கறை இருக்கும் தேர்தல் முடிந்த பிறகு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு , மேடையேறி பேசும் போது ஆறு போல பேச்சு கீழே இறங்கி பேசும்போது சொன்னதெல்லாம் போச்சு என்பது போல் இருக்கும்.
20 ஆயிரம் புத்தகத்தை படித்த அண்ணாமலைக்கு கச்சத்தீவு விவகாரம் தெரியவில்லையா? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கச்சத்தீவு விவகாரத்தை தெரிந்து கொண்டேன் என அண்ணாமலை தெரிவிப்பது வேடிக்கையானது.
அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்பவர்கள் தான் பலர் உள்ளனர். அதிமுகவுக்கு யார் மீதும் ஏறி பயணம் செய்ய வேண்டும் என தேவை இல்லை. பாமகவுக்கான அங்கீகாரம் யார் வழங்கியது என வரலாற்றை திரும்பிப் பாருங்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியை துவக்கும்போது அவர் குடும்பத்தில் யாரும் கட்சியின் பொறுப்புக்கு வர மாட்டார் அப்படி நடந்தால் சாட்டை சுழற்றுங்கள் என தெரிவித்தார் மகன் மருமகள் என அனைவரும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். இதற்கு பாமக தொண்டர்கள் தான் சாட்டையை சுழற்ற வேண்டும்.
ராமதாசை பொறுத்தவரை பேரம் பேசி எங்கு அதிகமாக கிடைக்கிறதோ அங்கு கூட்டணி அமைப்பார். கொள்கையும் கோட்பாடும் இல்லாமல் கூட்டணியை அமைத்துள்ளார் என்றார்.