தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது, இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை – ஆர்.பி.உதயகுமார்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது, இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை - ஆர்.பி.உதயகுமார்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது, இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை மன உலைச்சல் ஏற்படுகிறது தேனியில் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் புலம்பல்

வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க தேனி வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக காரியாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேனி தொகுதியில் திமுக, பாஜக கூட்டணி வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் அனைத்து ஊராட்சிகளுக்கு சென்றும் 9 லட்ச வாக்காளர்களை சந்தித்திருக்கிறார். தற்போது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பெயரில் பல்வேறு விவாதங்கள் நடக்கிறது. அதில் கருத்து திணிப்பு நடத்தி எங்கள் தொண்டா்களை சோர்வடைய செய்யும் வேலையை செய்கிறார்கள். ஆனால் எங்களின் வாக்கு முகவர்கள் ராணுவ வீரர்களை போல பயிற்சியளிக்கப்பட்டு சுறுசுறுப்பாக பணியாற்ற இருக்கிறார்கள்.

அதிமுகவுக்கு நிரந்தர வாக்கு வங்கி இருக்கிறது. அவர்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். இருப்பினும் ஆளுங்கட்சி ஏதேனும் தில்லுமுல்லு செய்வார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகம் புதுச்சேரியில் அதிமுக 40க்கு 25 இடங்களில் வெற்றி பெரும், குறிப்பாக தேனி தொகுதியில் வெல்வோம். எந்த சூழ்ச்சியும் சூதும் எடுபடாது.

வாக்குப்பதிவு செய்துவிட்டு வந்தவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதாக கூறுகிறீர்கள். ரகசிய வாக்குப்பதிவு ரகசியமாக இருக்கும் போது அவர்கள் கூறுவதை எப்படி உண்மையென எடுத்துக் கொள்ள முடியும். 16 லட்ச வாக்காளர்கள் உள்ள தொகுதியில் 3 லட்ச வாக்காளர்களிடம் கேட்டிருக்க வேண்டும், ஒரு சிலரிடம் கருத்து கேட்டுவிட்டு முடிவை கணிக்கிறார்கள். ஆன்-லைனில் கருத்துக்கணிப்பை நடத்தினோம் என்கிறார்கள். தொகுதியில் 15 சதவிகித 30 சதவிகித வாக்காளர்களை சந்தித்தால் கூட பரவாயில்லை.

இவ்வாறு கருத்துக்கணிப்பு வெளியிடுவதன் மூலம் பலருக்கும் மனஉளைச்சல் ஏற்படும். வாக்களித்த மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கட்சியினருக்கும் அச்சத்தை ஏற்படுத்திகிறது. சமூக வலைதளங்களிலும் தவறான கருத்துகளை வெளியிடுகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாவதை பார்த்து வயிறு எரிகிறது 2 நாள்களாக சாப்பிடவில்லை தூக்கமில்லை . மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது என்று புலம்பினார்.

ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அங்கு உள்ள வி.கே.பாண்டியன் மற்றும் தமிழர்கள் ஆடை குறித்து இழிவுபடுத்தும் விதமாக பாஜக பேசியதாக கருத்து நிலவுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் வி.கே. பாண்டியன் மதுரை மேலூரை சேர்ந்தவர் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியக பணியாற்றினார் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார் அதை பொருத்துக்கொள்ள முடியாமல் பிரச்சாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. உலகத் தமிழர்களுக்கு ஒரு தலைகுணிவு ஏற்பட்டாலும் அதை தமிழினம் எதிர்த்து நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
Video thumbnail
பாஜகவுக்கு, திமுக மீது ஏன் அவ்வளவு வன்மம்
00:54
Video thumbnail
2026 தேர்தலில் புதிய கூட்டணி | விஜய் - சீமான் - அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு?
00:46
Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img