ஆட்சி மாற்றம் வந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் – தமிழச்சி தங்கபாண்டியன்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆட்சி மாற்றம் வந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் – தமிழச்சி தங்கபாண்டியன்

ஆட்சி மாற்றம் வந்ததும் ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி!

ஆட்சி மாற்றம் வந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் - தமிழச்சி தங்கபாண்டியன்

ஆளுநர் பதவியை விட்டுவிட்டு தேர்தல் களத்திற்கு வந்துள்ளேன் என தமிழிசை சௌந்தராஜன் சென்டிமெண்டாக பிரச்சாரம் செய்வது எனக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை,எந்த சந்தேகமின்றி எங்கள் இலக்கு மிக தெளிவாக உள்ளது!

திமுகவின் தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னைக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, சின்னமலை, வேளச்சேரி சாலை பகுதிகளில் தனது பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார்.

தொடர்ந்து எட்டாவது நாளாக இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் தமிழச்சி தங்கபாண்டியன் சூடியம்மன் பேட்டை, காவேரி நகர், இந்திரா காந்தி தெரு, கஸ்தூரிபாய் தெரு, மேற்கு சிஐடி நகர், தாடண்டர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல சின்னமலை பகுதியில் உள்ள தாமஸ் நகர்,ரங்கராஜ் புரம், வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அவரோடு இணைந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் திமுக விற்கு வாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்தார்.

Minister Ma. Subramanian

இதனைத் தொடர்ந்து சன் செய்திக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டையில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன்,

முதல்வர் சொன்னது போல நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் கிடையாது.யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான தேர்தல், பதவிக்கான தேர்தல் கிடையாது கொள்கைக்கான தேர்தல்.

https://www.mugavari.in/ramadoss-condemns-to-dmk/

தென் சென்னையில் எதிர்த்துப் போட்டியிடக் கூடிய தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னர் பதவியை விட்டு கொடுத்து இந்த காலத்திற்கு வந்துள்ளேன் என கூறி செண்டிமென்ட முயற்சியை கையில் எடுப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு கவர்னர் பதவியை விட்டுவிட்டு நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்கு வந்தேன் என்பதில் எனக்கு பெரிய விஷயமாக தோன்ற வில்லை. மக்களோடு மக்களாக நாங்கள் அத்தனை பேரும் களத்தில் நிற்கிறோம். நாங்கள் செய்ததை சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். எங்களை பொறுத்தவரை யார் மீதும் எந்த சந்தேகமும் இன்றி மிக தெளிவாக சென்றுகொண்டிருக்கிறோம்.

ஆளுநர் பதவியை விட்டுவிட்டு தேர்தல் களத்திற்கு வந்துள்ளேன் என தமிழிசை சௌந்தராஜன் சென்டிமெண்டாக பிரச்சாரம்

தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள் வெள்ளம் ஏற்பட்ட போது அந்த துயர காலத்தில் யார் உடன் இருந்தார்கள், யார் வராதவர்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக தென் சென்னைக்கான பல்வேறு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் வைத்துள்ளோம். மெட்ரோ ரயிலுக்கான நிதி, தேவையற்ற சுங்கச்சாவடியைஅகற்றுவது, ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் உட்பட இப்படி பல கோரிக்கைகளை ஆட்சி மாற்றம் வந்ததும் நிறைவேற்றுவோம் என பேசினார்.

Video thumbnail
ராமேஸ்வரம் காந்தி நகரில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் புகுந்த மழை நீர்
02:36
Video thumbnail
விசாகப்பட்டினம்-விஜயவாடா பிரிவுக்கு இடையே நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக 16 ரயில்கள் ரத்து
00:51
Video thumbnail
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு Press Meet | mrk panneerselvam
02:50
Video thumbnail
டிட்வா புயல் : குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர், நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
00:41
Video thumbnail
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மீண்டும் வழங்க கோரி 13 வது நாளாக உண்ணாவிரதம்
00:22
Video thumbnail
நெல்லை அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு
01:38
Video thumbnail
கேரள மாநிலம் கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் மிகப்பெரிய தீ விபத்து
00:21
Video thumbnail
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | பகுதி 3
15:43
Video thumbnail
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | பகுதி 2
13:31
Video thumbnail
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | பகுதி 1
14:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img