பழனியில் சோகம் – கடன் பிரச்சனையால் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர். கடன் பிரச்சனையால் தற்கொலை மீடிவு எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனி முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் வீட்டிலிருந்த இளங்குமரன் மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்து வீட்டில் இருந்தவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவன் கொலை –மனைவி கைது .

தொலைபேசியை யாரும் எடுத்து பதில் கூறாததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் இறந்த நிலையில் கடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாய் ரேணுகாதேவி, மகள் தேன் மலர் தலையில் காயம் அடைந்த நிலையிலும் தந்தை இளங்குமரன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனியில் சோகம் கடன் பிரச்சனையால்  : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இளங்குமரன் கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது மனைவி மற்றும் மகள் இருவருக்கும் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பழனி நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கடன் பிரச்சினையால் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
பிஜேபி கூட்டணியால் திமுகவை வெற்றி பெற முடியுமா?
01:16
Video thumbnail
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
00:50
Video thumbnail
திமுகவை குறிவைக்கும் அமலாக்கத்துறை
01:29
Video thumbnail
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்
00:44
Video thumbnail
SIR திருத்தம், இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி
01:14
Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img