திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவன் கொலை –மனைவி கைது .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து  கணவன் கொலை –  மனைவி, கள்ளக்காதலன் கைது – 4 செல்போன், ஒரு இருசக்கர வாகனம் போலீசார் பறிமுதல் –  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தகாத  உறவுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து  கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து  கணவன் கொலை –மனைவி கைது .

வந்தவாசி  அடுத்த கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(40) இவரது மனைவி ரம்யா(36) சுதாகர் கூலி வேலை செய்து வந்த நிலையில்  கோழிப்புலியூர் கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு  ஒன்றிய செயலாளர் சீனுவளவன், இவரும்  சுதாகரும்  அடிக்கடி  சந்தித்து மது அருந்துவது பழக்கம்  உண்டு.

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து  கணவன் கொலை –மனைவி கைது .

இந்த நிலையில் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கல்யாணபுரம் கூட்ரோடு அருகே வாடகை வீட்டில் தங்கி நெல்  வைக்கோல் கட்டும் இயந்திரத்தை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். அப்போது பெருமாளுக்கும் சுதாகரனின் மனைவி ரம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவு  ஈடுபட்டு தனிமையில்  இருந்து வந்தனர். இதை அறிந்த சுதாகர் விசிகா பிரமுகர் சீனுவளவனிடம் தனது மனைவியின் தகாத உறவு குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக  சீனுவளவன் பெருமாளை  சந்தித்து ரம்யா உடன் தகாத உறவை கைவிடும் படி கூறியுள்ளார். தீடிரென பெருமாள் சீனுவளவனுடன்  பழக்கம்  வைத்து  நண்பர்களாக ஆகிவிட்டனர்.

இதை அடுத்து சுதாகர் பலமுறை ரம்யாவிடம் பெருமாள் உடன் தகாத  உறவை வைத்திருப்பதை கைவிடுமாறு எச்சரித்தும்  இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து உள்ளது.

பின்னர் ஆத்திரமடைந்த  மனைவி தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரை  கொலை செய்ய பல நாட்களாக திட்டம்  தீட்டி ரம்யாவும் பெருமாளும் ஒன்றாக முடிவு செய்தனர். இதற்கு விசிக பிரமுகர் சீனுவளவனை உதவிக்கு அழைத்துள்ளனர்.

இதற்காகவே 4  செல்போன்களை பயன் படுத்தி  திட்டம் தீட்டி கடந்த 17ஆம் தேதி அன்று விசிக பிரமுகர் சீனுவளவன் கோழிப்புலியூர் கிராம  கூட்டு  சாலை அருகே சுதாகரை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்தனர். பின்னர் ஆலியூர் கிராமத்தில் உள்ள தேக்கு மர  தோப்புக்கு அழைத்துச் சென்று ரம்யா  மற்றும் பெருமாள் கொடுத்த தகவலின் படி மதுவில் விஷம் கலந்து சுதாகருக்கு மீண்டும் கொடுத்துள்ளனர். அதனை  சுதாகர் குடித்து  வாயில் நுரை தள்ளியபடி அங்கேயே சடலமாக கடந்தார்.

இதையடுத்து சுதாகர் மது குடித்து தான்  இறந்திருக்கலாம் என்று கருதி  உறவினர்கள் சடலத்தை இறுதிச்சடங்கு செய்து கல்யாணபுரம் கிராமத்தில்  உள்ள  இடுகாட்டில் புதைத்து உள்ளனர்.

 

இதற்கிடையில் சுதாகரனின் இறப்பிற்கு சீனுவளவன் வராததால் உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள் சந்தேகம் அடைந்து கேட்டனர். அப்போது சீனுவளவன் சரியான பதில் அளிக்காத நிலையில் மறுநாள் அதிகாலையில்  சபரிமலைக்கு மாலை அணிவித்துவிட்டு தாழனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் தங்கியுள்ளார்.

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து  கணவன் கொலை –மனைவி கைது .

இதையடுத்து கடந்த 19ஆம் தேதி விசிக பிரமுகர் சீனுவளவன்  கோழிப்புலியூர் கூட்டு  சாலை அருகே மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக தொங்கினார்.

அப்போது சீனுவளவனை மர்ம  நபர்கள் கொலை செய்து மரத்தில்  தொங்கவிட்டு உள்ளனர் என்று கூறி உறவினர்கள் மற்றும் விடுதலை  சிறுத்தை கட்சியினர் கோழிப்புலியூர் கிராம  கூட்டு  சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரம் வந்தவாசி  – சேத்துப்பட்டு  சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல்  அறிந்த தேசூர் போலீசார் சாலை மறியலில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.  பின்னர்  சீனுவளவன் உடலை போலீசார்  கைப்பற்றி திருவண்ணாமலை  அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இரண்டாவது நாளாக உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள் மீண்டும் கூட்டு சாலையில் கொலை செய்த  மர்ம நபர்களை போலீசார் கைது செய்யும் வரை சீனுவளவன் உடலை வாங்க மறுத்து  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தேசூர்  போலீசார் மறுநாள் சாலை மறியலில் ஈடுபட்ட 10 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; இதுதான் திமுக வின் மந்திரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் .

மேலும் சீனுவளவன் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனையில்  உடல் முழுவதும் விஷம் குடித்து  தற்கொலை செய்து உள்ளதாக  தகவல் வெளியானது.

இந்த நிலையில் சுதாகரின்  உறவினர்கள்   சுதாகரனும் கொலை செய்யப்பட்டு இறந்து இருக்கலாம்  என்று சந்தேகம் வந்து உடன் கிராம உதவியாளரிடம் புகார்  மனு அளித்தனர். அதன் அடிப்படையில் வடவணக்கம்பாடி போலீசார் கடந்த 21 வழக்கு  பதிவு செய்தனர்.

பின்னர் 21 ஆம் தேதி சேத்துப்பட்டு வட்டாட்சியர் சசிகலா மற்றும்  போலீசார், மருத்துவர்கள் முன்னிலையில் கல்யாணபுரம் கிராமத்தில்  ஈடு காட்டில் உள்ள சுதாகரனின் சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை அங்கேயே  செய்யப்பட்டது.

பின்னர்  பரிசோதனையில்  சுதாகரனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து டிஐஜி, எஸ்பி  உத்தரவு பேரில் வந்தவாசி காவல்  துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி (பொறுப்பு) தலைமையில் 3 தனிப்படைகள்  அமைத்து  பல்வேறு இடங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது  பெருமாள் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.  தேசூர் போலீசார் மழையூர் கிராம கூட்டு சாலையில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த பெருமாளை சோதனை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார்  சந்தேகம் அடைந்து  தேசூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

அப்போது  பெருமாளுக்கும் ரம்யாவுக்கு தகாத  உறவு இருந்து  வந்தது போலீசாரின்  விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார்  விசாரணையில் தகாத உறவுக்கு  என்னுடைய  கணவர் இடையூராக  இருப்பதால் தீர்த்து கட்ட   நானும் பெருமாளும் விசிகா பிரமுகர் சீனுவளவனை  பயன்படுத்தி சுதாகரனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தேசூர்  போலீசார் ரம்யாவையும், பெருமாளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கொலை செய்வதற்கு பயன்படுத்திய ஒரு  இருசக்கர வாகனம் மற்றும் நான்கு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்‌.

மேலும் சீனுவளவன் மரத்தில் தொங்கியதால் மர்ம  நபர்கள் தான்  கொலை செய்து உள்ளனர் என்று கூறி இரண்டு நாட்களாக உறவினர்கள்  மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் தேசூர் போலீசார் 10  உறவினர்களை  கைது செய்து சிறையில் 6 நாட்களாக உள்ளனர். மேலும் சீனுவளவன் உடல் பிரேத பரிசோதனை செய்து ஆறு நாட்களாக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசூர் மற்றும்  கல்யாணபுரம் கிராம பகுதியில் 6 நாட்களாக 150க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று  குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வந்தது.

மேலும் தகாத உறவுக்கு கணவர் இடையூராக இருந்ததால்  ஆத்திரமடைந்த  மனைவி, கள்ள காதலனுடன்  சேர்ந்து  பல நாட்களாக திட்டம் தீட்டி  கணவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
ராமதாஸ் ஒரு மாபெரும் போராளி #ramadoss
00:56
Video thumbnail
யார் இந்த ஆடிட்டர் குருமூர்த்தி? Auditor #gurumurthy
00:51
Video thumbnail
பாமகவில் நடப்பது அப்பா மகன் மோதலா? (அ) ஆரிய திராவிட மோதலா? ஆடிட்டர் குருமூர்த்தியின் அடுத்த திட்டம்
13:13
Video thumbnail
ராமதாஸூடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு | பாஜக கூட்டணியில் பாமக | Auditor Gurumurthy | PMK
09:16
Video thumbnail
பாஜக சொல்வதை எடப்பாடி செய்தே ஆகவேண்டும்
00:59
Video thumbnail
மாநிலங்களின் கட்சிகளை அழிப்பதே பாஜகவின் நோக்கம்
01:00
Video thumbnail
அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி
01:02
Video thumbnail
ராமதாஸ் - அன்புமணி மோதலால் பாமகவில் குழப்பம் | அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி | PMK | BJP
13:04
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு
00:45
Video thumbnail
2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
00:50
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img