சூர்யாவின் அந்த போர்ஷன் கிளைமாக்ஸில் வரும் ‘கங்குவா’ குறித்து சிறுத்தை சிவா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சூர்யாவின் அந்த போர்ஷன் கிளைமாக்ஸில் வரும் ‘கங்குவா’ குறித்து சிறுத்தை சிவா!  நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன், விக்ரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நடிகர் சூர்யா இந்த படத்தில் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார். அதாவது பீரியாடிக் போர்ஷனில் பழங்குடியின மக்களில் ஒருவராகவும் நிகழ்கால போர்ஷனில் ஸ்டைலிஷான லுக்கிலும் நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து திஷா பதானி, பாபி தியொல் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அடுத்ததாக விரைவில் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் சிறுத்தை சிவா கங்குவா படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

“பீரியாடிக் போர்ஷனை தொடர்பு படுத்த நிகழ்கால போர்ஷனில் 25 நிமிட காட்சிகள் இருக்கிறது. இனிவரும் ப்ரோமோக்களில் சூர்யாவின் பிரான்சிஸ் கதாபாத்திரம் காட்டப்படும். சூர்யா தனது 49 வயதிலும் இந்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். அந்த போர்ஷன் கிளைமாக்ஸில் இடம்பெற்றுள்ளது. அது மிகவும் ட்ராமாட்டிக்காக இருக்கும். சூர்யா சார் அந்த போர்ஷனை பார்த்துவிட்டு, நம் முயற்சியின் வெற்றியை என்னால் உணர முடிகிறது என்று சொன்னார்” என சிறுத்தை சிவா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img