spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மார்கஸ் ஸ்டோனிஸ் அபார சதம் – சென்னை அணியை பந்தாடியது லக்னோ!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 38 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 39வது லீக் போட்டி நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 39வது லீக் போட்டியில் ரூத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 3 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் 11 ரன்னிலும் ரவீந்திர ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 210 ரன்கள் குவித்தது.

பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயிண்டன் டிகாக் ரன் ஏதுமின்றியும் கேஎல் ராகுல் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் அபாரமாக விளையாடி சதம் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு வித்திட்டார். அவர் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 13 ரன்னிலும் நிக்கோலஸ் பூரன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது சதம் விளாசிய மார்கஸ் ஸ்டோனிஸ்க்கு வழங்கப்பட்டது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img